ஆப்நகரம்

பாஜக ஜனாதிபதி வேட்பாளர் யார்? புதிர் அவிழுமா இன்று?

பாஜக தரப்பில் ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய இன்று அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் டெல்லியில் கூடுகிறது.

TOI Contributor 19 Jun 2017, 10:04 am
பாஜக தரப்பில் ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய இன்று அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் டெல்லியில் கூடுகிறது.
Samayam Tamil bjp parliamentary board to meet today to discuss nominee for presidential polls
பாஜக ஜனாதிபதி வேட்பாளர் யார்? புதிர் அவிழுமா இன்று?


பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில், இன்று கூடும் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர்களும், அமைச்சர்களுமான வெங்கைய்யா நாயுடு, அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொள்ள உள்ளனர். அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு நேற்று காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதையடுத்து, அவர் கலந்து கொள்ளமாட்டார் என்று தெரிய வந்துள்ளது.

இன்று இந்தக் கூட்டட்த்தில் ஜனாதிபதி வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படுமா? அல்லது இந்த வார இறுதியில் அறிவிக்கப்படுமா? என்பது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நேற்று திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பிஜூ ஜனதா தளம் கட்சித் தலைவர்களை அருண் ஜெட்லி சந்தித்துப் பேசினார்.

இதற்கிடையே வெங்கைய்யா நாயுடுவை சந்தித்துப் பேசிய சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள் ராம் கோபால் வர்மா மற்றும் நரேஷ் அகர்வாலும், அரசியல் சாயம் உள்ள வேட்பாளர்தான் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. கடந்த வெள்ளிக்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை வெங்கையா நாயுடு மற்றும் ராஜ்நாத் சிங் இருவரும் சந்தித்துப் பேசினார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை இடது சாரி தலைவர்களான சீதாராம் யெச்சூரி, சுதாகர் ரெட்டி, ராஜா நாயுடு ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

ஜார்கண்ட் கவர்னர் திரௌபதி முர்மு, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரின் பெயர் முன்பு பாஜக வேட்பாளராக கூறப்பட்டு வந்தது.

BJP Parliamentary Board to Meet Today to Discuss Nominee for Presidential Polls

அடுத்த செய்தி