ஆப்நகரம்

என்னையும், உங்களையும் கொன்று விடுவார்கள்: கெஜ்ரிவால் கடும் தாக்கு

பாஜக-வும், பிரதமர் மோடியும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். என்னையும், உங்களையும் கொலை கூட செய்து விடுவார்கள் என தில்லி முதல்வர் கெஜ்ரிவால் கடுமையாக தாக்கியுள்ளார்.

TOI Contributor 27 Jul 2016, 10:10 pm
புதுதில்லி: பாஜக-வும், பிரதமர் மோடியும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். என்னையும், உங்களையும் கொலை கூட செய்து விடுவார்கள் என தில்லி முதல்வர் கெஜ்ரிவால் கடுமையாக தாக்கியுள்ளார்.
Samayam Tamil bjp pm modi could kill me and you arvind kejriwal
என்னையும், உங்களையும் கொன்று விடுவார்கள்: கெஜ்ரிவால் கடும் தாக்கு


பிரதமர் மோடிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று சற்று கூடுதலாக என்னையும், உங்களையும் பாஜக-வினரும், பிரதமர் மோடியும் கொலை கூட செய்து விடுவார்கள், எனவே எதற்கும் துணிந்து இருங்கள் என ஆம் ஆத்மி கட்சியினரிடம் அக்கட்சியின் யூ-டியூப் சானல் மூலம் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது: மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி ஆம் ஆத்மி கட்சியை முற்றிலும் அழிக்கும் செயலில் தீவிரம் காட்டி வருகிறது. இது நமக்கு மிகவும் இக்கட்டான காலக்கட்டம், நீங்கள் இது பற்றி சிந்தியுங்கள், உங்கள் குடும்பத்தினரிடம் பேசுங்கள். அவர்களது அடக்குமுறை வரும் நாட்களில் இன்னும் மோசமாகவே போகும் என நம்புகிறேன்.

எனவே அனைவரும் மனோபலத்துடன் இருப்பது அவசியம். இயலாதவர்கள் விலகிக் கொள்ளலாம். பாஜக-வும், பிரதமர் மோடியும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். என்னையும், உங்களையும் கொலை கூட செய்து விடுவார்கள்.எந்த வித தியாகத்துக்கும் தயாராக உள்ளீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

ஒரு நாட்டின் பிரதமர் கோபத்தில் முடிவுகளை எடுக்கத் தொடங்கி விட்டாரென்றால் நாடே அபாயத்திற்கு சென்று விடும். என்னால் தூங்க கூட இயலவில்லை. எங்களைக் கையாள்வதில் அவர் மூளையை உபயோகிப்பதில்லை.

சிபிஐ, வருமான வரித்துறை மற்றும் பிற அமைப்புகள் தொடர்ந்து எங்கள் கட்சியினர் மீது ரெய்டு நடத்துவதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று நான் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். யாராவது ஒருவர் மூளையாக இதன் பின்னணியில் செயல்பட வேண்டும், யார் அவர்? அமித் ஷா, மோடி, பிரதமர் அலுவலகம் என அனைவரும் ஒன்று கூடிவிட்டனர்.

ஆம் ஆத்மி கட்சி தில்லியில் நல்லாட்சி அளித்து வருவதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. அவர்கள் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்ற முடியவில்லை என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி