ஆப்நகரம்

வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக்கை பாஜக, ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது: ராகுல் காந்தி

இந்தியாவில் வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்

Samayam Tamil 16 Aug 2020, 5:19 pm
குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவரிடத்தும் சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் முக்கிய பங்காற்றுகிறது. அச்சு ஊடகங்கள் அரிதாக கிடைத்த இடங்களை மட்டுமல்லாமல் அனைத்து வகையினரையும் தமதாக்கி கொண்டிருக்கிறது சமூக வலைதளங்கள். அரசியல், சினிமா, கல்வி, அறிவியல் என அனைத்தையும் நம் முன் கொண்டு வந்ததில் இதன் பங்கு அளப்பரியது.
Samayam Tamil bjp rss control facebook and whatsapp in india says rahul gandhi
வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக்கை பாஜக, ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது: ராகுல் காந்தி


உயரத்தில் இருப்பவர்களின் முகத்திரையைக் கிழிப்பதற்கும், சாமானிய மக்களை உச்சத்தில் தூக்கி வைப்பதும் சமூக வலைதளங்களில் ஒரே நிமிடத்தில் சாத்தியம். விரல் நுனியில் சில நிமிடங்களில் கொட்டும் அளவில்லா தகவல்கள் அதன் வீரியத்தின் மையப்புள்ளி. ஆனால், இதற்கு பின்னால் இருக்கும் ஆபத்துகளும் ஏராளாம். எழுத்து வடிவில் எதை கொடுத்தாலும் அதை உண்மையென்று எண்ணி படித்த சமூகம், வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக்கில் எழுத்து வடிவில் எந்த தகவலை கொடுத்தாலும் அதன் உண்மைத் தன்மை குறித்து ஆராயாமல் அதனை அப்படியே நம்பும் சமூகமாக வளர்ந்திருக்கிறது.

மாபெரும் புரட்சிகளுக்கும், ஆட்சி மாற்ரத்துக்கும் இந்த சமூக வலைதளங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. 2014ஆம் ஆண்டில் பாஜக ஆட்சியை பிடிப்பதற்கு மிக முக்கிய காரணம் சமூக வலைதளங்கள் என்று சொல்லப்பட்டது. அந்த ஆட்சியை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருப்பதற்கும் சமூக வலைதளங்களில் அக்கட்சியினரது இடைவிடாத செயல்பாடுகளே காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

கொரோனாவுக்கு மூன்று தடுப்பூசிகள்... மோடி ஜி அறிவிப்பு!!


இந்த நிலையில், சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்வதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ஃபேஸ்புக்கின் உண்மை நிலையை அமெரிக்க ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன என தெரிவித்துள்ளதுடன், அது தொடர்பான செய்தித்தாளின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

அடுத்த செய்தி