ஆப்நகரம்

அடேய் கம்யூனிஸ்ட்களா; எங்களயா போட்டுத் தள்றீங்க? உங்கள பாத்துகிறேன்: அமித் ஷா!

கம்யூனிஸ்ட் ஆளும் கேரளாவில் பாஜக-ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அதிகளவில் கொல்லப்படுவதாக அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

TNN 8 Oct 2017, 3:03 pm
டெல்லி: கம்யூனிஸ்ட் ஆளும் கேரளாவில் பாஜக-ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அதிகளவில் கொல்லப்படுவதாக அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
Samayam Tamil bjp rss workers killed since left came to power
அடேய் கம்யூனிஸ்ட்களா; எங்களயா போட்டுத் தள்றீங்க? உங்கள பாத்துகிறேன்: அமித் ஷா!


தலைநகர் டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக பேரணி நடத்தப்பட்டது. டெல்லி கன்னாட் பகுதியில் இருந்து சிபிஐ(எம்) அலுவலகம் வரை 2 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, துணைத் தலைவர் ஷியாம் ஜஜூ, கட்சியின் தேசிய அளவிலான பொறுப்பாளர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்று பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, கேரளாவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, 120க்கும் மேற்பட்ட பாஜக-ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இதற்காக கம்யூனிஸ்ட் கட்சி வெட்கப்பட வேண்டும் என்றார்.

குறிப்பாக முதலமைச்சர் பினராயி விஜயனின் சொந்த தொகுதியில் தான், அதிக கொலைகள் நிகழ்ந்துள்ளதாக சுட்டிக் காட்டினார். இடதுசாரிகளுக்கு எதிராக தங்கள் கட்சியினர் பலத்தைக் காட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தொடர் படுகொலைகளால் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், கட்சிப் பணியை விடாமல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இடதுசாரி கட்சிகளின் அரசியல் படுகொலைகளை கண்டிக்கும் வகையில், சத்தியாகிரக வழியில் போராட வேண்டும். அமைதியான முறையில் பேரணிகள் நடத்தி, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.

Over 120 BJP-RSS workers killed since Left came to power: Amit Shah.

அடுத்த செய்தி