ஆப்நகரம்

எங்க கட்சியில 10 தலைவருங்க மாறிட்டாங்க... ஆனா உங்க கட்சியில? -காங்கிரஸை கலாய்க்கும் பாஜகவினர்!!

பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைமையை வைத்து, காங்கிரஸை பாஜக அபிமானிகள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சகட்டுமேனிக்கு கலாய்த்து வருகின்றனர் .

Samayam Tamil 20 Jan 2020, 6:21 pm
பாஜகவின் புதிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை வைத்து, காங்கிரஸ் கட்சியை, பாஜக அபிமானிகள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.
Samayam Tamil எங்க கட்சியில 10 தலைவருங்க மாறிட்டாங்க


பாஜகவின் தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா இன்று (ஜனவரி 20) அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

6 போதும், அதுக்கு மேல வேண்டாம்- அமித் ஷா ஏன் இப்படி சொன்னார் தெரியுமா?

கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக இப்பதவியை வகித்துவந்த அமித் ஷா வசமிருந்து, கட்சியின் தேசிய செயல் தலைவராக இருந்த ஜே.பி.நட்டாவுக்கு, இந்த முக்கியமான பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் 11 ஆவது தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, சமூக வலைதளங்களில் காங்கிரஸ் கட்சியை பாஜகவினர் கலாய்த்து வருகின்றனர்.

அதாவது கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை, குஷபாவ், பி.லெஷ்மண், வி.நாயுடு, எல்.கே.அத்வானி, அமித் ஷா என, கட்சியில் மொத்தம் ஒன்பது தலைவர்கள் மாறிவிட்டார்கள். தற்போது, பாஜகவின் புதிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜே.பி.நட்டா: அமித் ஷா இடத்திலிருந்து இனிமே பாஜகவை வழிநடத்தப் போறவர் இவர்தான்!!

ஆனால், கிட்டத்தட்ட கால் நூற்றாண்டாக, அதாவது 1998 ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை, காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியே இருந்து வருகிறார். இடையில் கொஞ்ச காலத்துக்கு மட்டும் அவரது மகனான ராகுல் காந்தி கட்சியின் தலைமைப் பதவியை வகித்தார்.

இப்படி கட்சியில் குடும்ப ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்தி வரும் காங்கிரஸ் கட்சிதான், நாட்டில் மாற்றம் வர வேண்டும் என்று பேசி வருகிறது என, சமூக வலைதளங்களில் பாஜகவினர் கிண்டலடித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி