ஆப்நகரம்

தேர்தலுக்கு முன்னாடி போர்: 2 வருஷத்துக்கு முன்னாடியே என்கிட்ட பாஜக சொல்லிட்டாங்க: பிரபல நடிகர்

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு போர் நடக்கலாம் என்று பாஜக கூறியதாக தெலுங்கு நடிகரும் ஜனசேனை கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 1 Mar 2019, 11:37 am
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு போர் நடக்கலாம் என்று பாஜக கூறியதாக தெலுங்கு நடிகரும் ஜனசேனை கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil pawan kalyan


தெலுங்கு வட்டாரத்தில் முன்னனி நடிகராக இருந்து அரசியலுக்கு வந்துள்ளவர் பவன் கல்யாண். இவர் நடிகர் சிரஞ்சீவியின் தம்பி ஆவார். ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்று, தற்போது தன்னுடைய ஜனசேனை கட்சியை பலப்படுத்தி வருகிறார். இதனிடையே பவன் கல்யாணை முதல்வராக கொண்டு ஆந்திராவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கவும் திட்டம் தீ்ட்டி வருவதாக பேச்சு அடிபடுகிறது.

இந்நிலையில், அண்மையில் நடந்துள்ள புல்வாமா பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து பவன் கல்யாண் சர்ச்சையான கருத்தை பதிவு செய்துள்ளார். ஆந்திர பிரததேச மாநிலம், கடப்பா மாவட்டத்தில் நேற்று பவன் கல்யாண் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு போர் வந்தாலும் வரும் என்று பாஜக தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னரே பாஜக இதனை கூறியதாக பவன் கல்யாண் கூறியுள்ளார். மேலும், எந்த ஒரு பிரச்னைக்கும் போர் தீர்வாகாது என்று பவன் கல்யாண் பதிலளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி