ஆப்நகரம்

பாராளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வராது: ஆந்திர முதல்வர் உறுதி

அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வராது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 29 May 2018, 8:38 pm
அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வராது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil பாராளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வராது: ஆந்திர முதல்வர் உறுதி
பாராளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வராது: ஆந்திர முதல்வர் உறுதி


ஆந்திராவை ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் மாநாடு இன்று நடைபெற்றது. தெலுங்கு தேசம் கட்சியின் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு பேசிய, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, “மத்தியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என எனக்கு எப்பொழுதும் ஆசை இருந்ததில்லை. என்னுடைய இலக்கு எப்போதுமே நமது மாநிலத்தையும் அதன் வளர்ச்சியையும் நோக்கியே இருந்தது. ஒரு விஷயம் உறுதி, 2019 ஆம் ஆண்டு பாஜக மத்தியில் ஆட்சியமைக்காது. குறிப்பாக, ஆந்திராவில் பாஜக ஒரு சீட்டைக் கூட வாங்காது,” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாஜகவுடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் கூட்டணியில் இருந்து பிரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்