ஆப்நகரம்

டீ குடித்தால் குற்றமா? கன்னத்தில் அரை வாங்கிய பெண் கதறல்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரயிலில் தன் முஸ்லிம் தோழியுடன் சேர்ந்து டீ குடித்த பெண்ணை பாஜக பிரமுகர் ஒருவர் செவிட்டில் அரைந்தது வீடியோவாக பரவி வருகிறது.

TNN 22 Sep 2017, 6:36 pm
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரயிலில் தன் முஸ்லிம் தோழியுடன் சேர்ந்து டீ குடித்த பெண்ணை பாஜக பிரமுகர் ஒருவர் செவிட்டில் அரைந்தது வீடியோவாக பரவி வருகிறது.
Samayam Tamil bjp womens wing president caught on camera slapping girl for sipping tea with muslim friend
டீ குடித்தால் குற்றமா? கன்னத்தில் அரை வாங்கிய பெண் கதறல்!


உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த பெண் ஒருவர் தன் தோழியுடன் சேர்ந்து டீ குடித்திருக்கிறார். அதற்காக, அருகில் இருந்த பாஜக பெண் பிரமுகர் ஒருவர் அந்தப் பெண்ணை கன்னத்தில் அரைந்துள்ளார்.

“இவ்வளவு வயது ஆகிவிட்டது. அவள் முஸ்லிம் என்று உனக்குத் தெரியாதா?” என்று கேட்டுக்கொண்டு டீயை தன் முஸ்லிம் தோழியுடன் பகிர்ந்த பெண்ணை அந்த பாஜக பிரமுகர் அடிக்கும் வீடியோ பதிவு வைரலாக பரவி வருகிறது.

வெறி பிடித்தது போல தாக்கிய அந்த பாஜக பிரமுகர் பாஜக மகளிர் அணியைச் சேர்ந்தவர் என்று தகவல் கிடைத்துள்ளது.

அடுத்த செய்தி