ஆப்நகரம்

கேரளாவில் சாமியாரின் ஆண் உறுப்பை துண்டித்தது யார்?- போலீஸ் தீவிர விசாரணை

கேரளாவில் சாமியார் ஆண் உறுப்பை துண்டித்த பெண், தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து, நீதிமன்றத்தில் கடிதம் எழுதி, வாக்குமூலமாக சமர்ப்பித்துள்ளார்.

TNN 18 Jun 2017, 12:40 pm
கேரளாவில் சாமியார் ஆண் உறுப்பை துண்டித்த பெண், தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து, நீதிமன்றத்தில் கடிதம் எழுதி, வாக்குமூலமாக சமர்ப்பித்துள்ளார்.
Samayam Tamil bobbitisation of kerala godman victim retracts charge
கேரளாவில் சாமியாரின் ஆண் உறுப்பை துண்டித்தது யார்?- போலீஸ் தீவிர விசாரணை


பத்தினம்திட்டா பகுதியில் ஹரி ஸ்வாமிகள் என அழைக்கப்படும் 54 வயதான, அந்த சாமியார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய பலமுறை முயற்சித்ததாகக் கூறி, 23 வயது இளம்பெண், அவரின் ஆண் உறுப்பை துண்டித்துவிட்டார். அந்த சாமியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இதுகுறித்த வழக்கு விசாரணை, திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக இளம்பெண் போலீசில் வாக்குமூலம் அளித்தார். அதில் சாமியார் தன்னை 16 வயது முதல் பலாத்காரம் செய்து வந்ததாகவும், தொல்லை அதிகரித்ததால் உறுப்பை அறுத்ததாகவும் கூறினார். இதனால் சாமியாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, சாமியாரின் மர்ம உறுப்பை தனது மகள் அறுக்கவில்லை என்றும், அவளது காதலர் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டார்கள் என்றும் மகளின் தாயார் டிஜிபியிடம் புகார் அளித்தார்.

இந்நிலையில், குறிப்பிட்ட இளம்பெண் எழுதிய கடிதம் திருவனந்தபுரம் போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: சம்பந்தப்பட்ட சாமியார் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவது வழக்கம். என்னை அவர் பலாத்காரம் செய்ததாக கூறப்படுவதில் உண்மை இல்லை. என் காதலருடன் சாமியாருக்கு முன் விரோதம் இருந்தது. சம்பவதன்று சாமியாரின் மர்ம உறுப்பை அறுக்க கூறினர். ஆனால் எனக்கு தைரியம் இல்லாததால் அவரும், அவரது நண்பர்களும் சேர்ந்து இந்த செயலை செய்து விட்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பல திருப்பங்களை சந்தித்து வரும் இந்த வழக்கில், உண்மை குற்றவாளிகள் யார் என்பது பற்றி போலீசார் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

A rape case involving a bobbitised godman took a curious turn on Thursday after a letter—purportedly written by his victim—was submitted to a trial court.

அடுத்த செய்தி