ஆப்நகரம்

கொதிக்க வைத்த பூண்டு தண்ணீரை குடித்தால் கொரோனா பாதிப்பு சரியாகிவிடுமா- உண்மை என்ன...?

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனாவை குணப்படுத்த பல்வேறு வைத்திய முறைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதன் உண்மை நிலையை அறியலாம்.

Samayam Tamil 5 Feb 2020, 3:30 pm
  1. கொரோனா வைரஸ் என்றால் என்ன?
    Samayam Tamil Corona1

    இதுவொரு கொடிய கிருமி. கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்ந்த 2019-nCoV என்ற வைரஸ் சீனாவின் வுஹான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. அசைவ உணவு சந்தையில் இருந்த பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருப்பதாக சீன அதிகாரிகள் கூறுகின்றனர்.
  2. கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது?
    இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவரின் இருமல், தும்மல் ஆகியவற்றின் மூலம் பிறருக்கு பரவுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அதாவது மிக எளிதாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது.
  3. கொதிக்க வைத்த பூண்டு தண்ணீர் கொரோனாவை குணப்படுத்துமா?
    இது சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் ஒரு பொய்யான தகவல். இதனை யாரும் நம்ப வேண்டாம். கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.
  4. கொரோனாவிற்கு மருந்து இருக்கிறதா?
    இதற்கான மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே தற்போது இருக்கும் ஒரேவழி கொரோனா வைரஸ் பாதித்த நபரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதே ஆகும். இதற்கிடையில் சில நாடுகளில் ஹெச்.ஐ.விக்கு அளிக்கப்படும் மருந்துகளை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்து குணப்படுத்த முடிகிறதா என்று ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
  5. கொரோனாவில் இருந்து எப்படி நம்மை பாதுகாத்து கொள்வது?
    முதலில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம். யாருக்கும் அதனை பகிர வேண்டாம். இருமல், தும்மல், சளி, காய்ச்சல் போன்றவை இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால் கட்டாயம் மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டும். வெளியில் செல்லும் போது மூக்கு, வாயை மறைக்கும் மாஸ்க் அணிந்து கொள்ளவும். கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். எப்போதும் நன்றாக கை கழுவ வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது அவசியம்.

அடுத்த செய்தி