ஆப்நகரம்

மாட்டிறைச்சி கருத்து: பாஜக-வில் இப்படியும் ஒரு எம்.பி.,!!

மாட்டிறைச்சிக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கருத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 29 Aug 2016, 3:51 pm
புதுதில்லி: மாட்டிறைச்சிக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கருத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil bolt advised to eat beef won 9 olympics gold bjp mp udit raj
மாட்டிறைச்சி கருத்து: பாஜக-வில் இப்படியும் ஒரு எம்.பி.,!!


உலகின் அதிவேக ஓட்டக்காரர் என்று கருதப்படும் உசைன் போல்ட், தான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததாகவும், தனது பயிற்சியாளர் தன்னை இருவேளை மாட்டிறைச்சி சாப்பிட அறிவுறுத்தினார். அதன் காரணமாகவே இத்தகைய ஆற்றல் தமக்கு கிடைத்ததாகவும் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், தலித் தலைவருமான உதித் ராஜ், இருவேளை மாட்டிறைச்சி சாப்பிட்ட உசேன் போல்ட் ஒலிம்பிக் போட்டிகளில் 9 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். உசன் போல்ட்டும் அவரது பயிற்சியாளரும் வழி ஒன்றை கண்டுபிடித்தது போல், நமது வீரர்களும் சூழ்நிலைக்கேற்றவாறு வழி கண்டுபிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது. அக்கட்சி காரர்களும், மாட்டிறைச்சி குறித்து இவ்வாறு கருத்துகளை கூறியது அல்ல. இந்நிலையில், பாஜக எம்.பி., ஒருவர் இவ்வாறு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், பாஜக-வில் இப்படியும் ஒரு ஆள் இருக்கிறாரா என்ற கேள்வியையும் எழுப்பியது.

இதற்கு உடனே முற்றுப்புள்ளி வைத்துள்ள உதித் ராஜ், உசேன் போல்ட் கூறியதை தான் அப்படியே பதிவிட்டிருந்தேன். அதன்மூலமாக, சூழ்நிலையை குறை கூறாமல், நமது வீரர்களும் தங்களது வெற்றி இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்று கூற முற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கட்டமைப்பு சரியில்லை, லஞ்சம் உள்ளது என்று கூறிக் கொண்டிருக்காமல், விளையாட்டின் மீது உசேன் போல்ட்டுக்கு இருந்த அற்பணிப்பை நமது வீரர்களும் கற்றுக்கொள்ள வேண்டும். ஜமைக்கா, கென்யா போன்ற நாடுகளை ஒப்பிடும் போது, நமது அரசு அதிகளவிலான பணத்தை விளையாட்டுக்கு செலவழிக்கிறது என்றும் உதித் ராஜ் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி