ஆப்நகரம்

பிரெக்ஸிட் போன்று தில்லிக்கும் வேண்டும்: கெஜ்ரிவால் வலியுறுத்தல்

பிரெக்ஸிட் போன்று தில்லிக்கும் பொது வாக்கெடுப்பு நடத்தி தனி மாநில அந்தஸ்து கோரப்பட வேண்டும் என தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

TNN 24 Jun 2016, 10:41 pm
புதுதில்லி: பிரெக்ஸிட் போன்று தில்லிக்கும் பொது வாக்கெடுப்பு நடத்தி தனி மாநில அந்தஸ்து கோரப்பட வேண்டும் என தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil brexit impact kejriwal urges common vote to seperate sate status for delhi
பிரெக்ஸிட் போன்று தில்லிக்கும் வேண்டும்: கெஜ்ரிவால் வலியுறுத்தல்


தில்லி தனி மாநிலம் இல்லாமல் யூனியன் பிரதேசமாக இருக்கும் காரணத்தால், காவல்துறை, அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்ட பல விஷயங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே தான் இருக்கும். சில இடங்களில் தில்லி முதல்வரின் அதிகாரத்தை விஞ்சும் அளவுக்கு தில்லி துணைநிலை ஆளுநரின் அதிகார பலம் இருக்கும்.

இதனை அடிக்கடி சுட்டிக் காட்டி தில்லிக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டும் என அங்கு ஆட்சி செய்து வரும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அரசு கோரி வருகிறது.

இதனிடையே, பொதுவாக்கெடுப்பு மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற அந்நாட்டு மக்கள் பெரும்பான்மை ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பிரெக்ஸிட் போன்று தில்லியில் பொதுவாக்கெடுப்பு நடத்தி தனி மாநில அந்தஸ்து கோர வேண்டும் என தில்லி முதல்வர் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த கோரிக்கை அபாயகரமானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி