ஆப்நகரம்

இமாச்சல பிரதேசத்தில் 44 வருட பழமையான பாலம் இடிந்து விழுந்து விபத்து

இமாச்சல பிரதேசத்தில் காங்ரா மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மழைநீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் 160 மீட்டர் நீளமுள்ள பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

TNN 12 Aug 2016, 10:45 am
காங்ரா: இமாச்சல பிரதேசத்தில் காங்ரா மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மழைநீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் 160 மீட்டர் நீளமுள்ள பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
Samayam Tamil bridge collapsing due to spate in river in kangra district of himachal pradesh
இமாச்சல பிரதேசத்தில் 44 வருட பழமையான பாலம் இடிந்து விழுந்து விபத்து


கடந்த 1972ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலம் மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில், அங்கு நேற்று பெய்த கனத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 160 மீட்டர் நீளம் கொண்ட 44 வருட பழமையான பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 76 மீட்டர் நீளம் வரையிலும், 10 தூண்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

WATCH: Dramatic visuals of a bridge collapsing due to spate in river in Kangra district of Himachal Pradeshhttps://t.co/KoRa7rjqfj— ANI (@ANI_news) August 12, 2016

அதிக மக்கள் தொகை கொண்ட இந்த காங்ரா மாவட்டத்தில் பேனர், மாஹி மற்றும் பியாஸ் ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இமாச்சல பிரதேசத்தில் நேற்று பதிவான மழை நிலவரங்கள் (மி.மீ): காங்ரா (84), சர்காகட் (70), அகார் (68), பண்டோ (56), தர்மசாலா (56 ), மசோப்ரா (59), ஹமிர்பூர் (49), ரேணுகா (49), பிலஸ்பூர் (46), மெஹ்ரே (48), சங்க்ரா (48), சுந்தர்நகர் (45), சிம்லா (40) உள்பட பல பகுதிகளில் கனத்த மழை பெய்துள்ளது.

அடுத்த செய்தி