ஆப்நகரம்

இன்றைய சென்செக்ஸ் நிலவரம்?

இன்றைய சென்செக்ஸ் புள்ளி நிலவரம் 38981.43 ஆக உள்ளது. ஆசிய சந்தைகளில் இரண்டு பிரதான சந்தையான ஜப்பான் மற்றும் சீனா பங்குச் சந்தைகள் விடுமுறை காரணமாக மூடப்பட்டன. MSCI பரந்த குறியீட்டெண் ஜப்பானுக்கு வெளியே ஆசிய- பசிபிக் பங்குகள் 0.1 சதவீதம் குறைந்தன.

Samayam Tamil 2 May 2019, 4:19 pm
இன்றைய சென்செக்ஸ் புள்ளி நிலவரம் 38981.43 ஆக உள்ளது.
Samayam Tamil sensexup-770x433


சென்செக்ஸில் ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோசிஸ், மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் ஆகியவை சென்செக்ஸில் சரிவை சந்தித்தன.

இந்தியப் பங்குச் சந்தை இன்று சரிவை எதிர்கொண்டன. ஆட்டோமொபைல் பங்குகள் நேற்று குறைந்து 38,882.99 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 48.6 புள்ளிகள் சரிந்து 11,699.55 புள்ளிகளில் உள்ளது.

காலை 9:39 மணியளவில் சென்செக்ஸ் 53.23 புள்ளிகள் சரிந்திருந்தன. நிஃப்டி 21.30 புள்ளிகள் குறைந்திருந்தன.

நிஃப்டியில் டாடா மோட்டார்ஸ், ஈகர் மோட்டார்ஸ், ஹண்டல்கோ இண்டஸ்ட்ரிஸ் மற்றும் மாருதி சுசுகி இந்தியா, ஆகியவை தடுமாறி வருகின்றன. நிறுவனத்தின் பங்கு விலைகள் 1.45 சதவீதம் முதல் 2.12 சதவீதம் வரை குறைந்தன.

சென்செக்ஸில் ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோசிஸ், மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் ஆகியவை சென்செக்ஸில் சரிவை சந்தித்தன.

நிஃப்டியில் மாருதி சுசுகியின் இந்திய பங்குகள் 2.12 சதவீதம் சரிந்தன. மாருதியின் ஏப்ரல் மாத விற்பனை 17.19 சதவீதம் சரிவை எதிர்கொண்டன. கடந்த ஆண்டை விட வளர்ச்சி விகிதம் கணிசமாகக் குறைந்தன.

ஆசிய சந்தைகளில் இரண்டு பிரதான சந்தையான ஜப்பான் மற்றும் சீனா பங்குச் சந்தைகள் விடுமுறை காரணமாக மூடப்பட்டன. MSCI பரந்த குறியீட்டெண் ஜப்பானுக்கு வெளியே ஆசிய- பசிபிக் பங்குகள் 0.1 சதவீதம் குறைந்தன.

இன்றைய சென்செக்ஸ் புள்ளி நிலவரம் 38981.43 ஆக உள்ளது. நேற்றைய நிலவரத்தை காட்டிலும் தற்போது ஆட்டோ மொபைல் புள்ளிகள் உயர்ந்துள்ளன.

அடுத்த செய்தி