ஆப்நகரம்

பதான்கோட் அருகே ஊடுருவ முயன்ற தீவிரவாதி சுட்டுக்கொலை!

பஞ்சாப் மாநிலம், பதான்கோட் அருகே இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சந்தேகத்துக்கிடமான நபரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

TNN 3 Dec 2016, 2:52 pm
பஞ்சாப் மாநிலம், பதான்கோட் அருகே இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சந்தேகத்துக்கிடமான நபரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
Samayam Tamil bsf foils intrusion bid in pathankot
பதான்கோட் அருகே ஊடுருவ முயன்ற தீவிரவாதி சுட்டுக்கொலை!

பதான்கோட் மாவட்டத்தில் உள்ள பாமியல் பகுதியின் திண்டா என்ற இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு வழக்கம்போல, எல்லைப் படையினர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில், எச்சரிக்கையை மீறி, இந்திய எல்லைக்குள் ஊடுருவிய நபரை, பாதுகாப்பு வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

மேலும், அப்பகுதியில் வேறு யாரேனும் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனரா என்பது பற்றி விரிவான தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

BSF has foiled a cross-border intrusion bid after its troopers shot down a suspect at Dhinda post in Pathankot district of Punjab.

அடுத்த செய்தி