ஆப்நகரம்

புதுச்சேரி சட்டமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல்

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின், 2016-17ம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

TNN 29 Aug 2016, 6:54 am
புதுச்சேரி: காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின், 2016-17ம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.
Samayam Tamil budget in puducherry assembly today
புதுச்சேரி சட்டமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல்


புதுச்சேரியில் 14-ஆவது சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடர், கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் 2016-17-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்கிறார். இதற்கிடையில், பட்ஜெட்டில் இடம்பெற உள்ள அறிவிப்புகள், திட்டங்கள் குறித்து அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம், கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், துறை செயலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள், தேர்தல் கால வாக்குறுதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது அமைச்சர்கள் தங்கள் துறைகளில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்து வலியுறுத்தினர்.

மத்திய அரசு நிதி போதிய ஒதுக்கீடு செய்யாததால், மாநில அரசின் வருவாயை பெருக்கும் வகையில், இந்த பட்ஜெட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய வரி விதிப்பு குறித்தும் அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி