ஆப்நகரம்

புர்ஹான் வானி முதல் நினைவாண்டு: காஷ்மீரில் ஊரடங்கு!!

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் புர்ஹான் வானி கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

TOI Contributor 8 Jul 2017, 2:34 pm
ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் புர்ஹான் வானி கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil burhan wani anniversary curfew in tral restrictions across kashmir
புர்ஹான் வானி முதல் நினைவாண்டு: காஷ்மீரில் ஊரடங்கு!!


இந்திய பாதுகாப்புப் படையால் கடந்தண்டு ஜூலை 8-ம் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் புர்ஹான் வானி கொல்லப்பட்டார். அப்போது காஷ்மீரில் பெரிய அளவில் போராட்டம் நடந்தது. பாகிஸ்தான் அவரை தியாகி என்று அழைத்தது. இந்த நிலையில் இன்று முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காஷ்மீர் பள்ளதாக்கு பகுதிகளில் காஷ்மீர் பிரிவினைவாதிகள் புனித பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

புர்ஹானின் சொந்த ஊரான ட்ரால் நோக்கி புனித பேரணி நடத்தி அவருக்கு மரியாதை செலுத்துமாறு பிரிவினைவாதத் தலைவர்கள் சையத் ஷா கிலானி, மிர்வாய்ஷ் உமர் பரூக், யாசின் மாலிக் ஆகியோர் அழைப்பு விடுத்திருந்தனர். இதையடுத்து, அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் காஷ்மீரின் முக்கிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. .

புர்ஹான் வானியின் சொந்த ஊரான புல்வாமா மாவட்டத்தில் ட்ரால் நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு முன்னிட்டு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன.

Burhan Wani anniversary: Curfew in Tral, restrictions across Kashmir

அடுத்த செய்தி