ஆப்நகரம்

ஏவுகணை தயாரிப்பு: 4 ஆண்டுகளுக்கு ரூ.10,900 கோடி ஒதுக்கீடு

அடுத்த 4 ஆண்டுகளில் 30 பிஎஸ்எல்வி மற்றும் 10 ஜிஎஸ்எல்வி எம்கே III உள்ளிட்ட ஏவுகணைகள் தயாரிப்புக்கு ரூ.10,900 கோடி ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Samayam Tamil 6 Jun 2018, 8:12 pm
அடுத்த 4 ஆண்டுகளில் 30 பிஎஸ்எல்வி மற்றும் 10 ஜிஎஸ்எல்வி எம்கே III உள்ளிட்ட ஏவுகணைகள் தயாரிப்புக்கு ரூ.10,900 கோடி ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
Samayam Tamil isro

10 ஜிஎஸ்எல்வி எம்கே III (GSLV Mk III) ஏவுகணைகளை தயாரிக்க ரூ.4,338 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 30 பிஎஸ்எல்வி (PSLV) ஏவுகணைகளுக்கு ரூ. 6,573 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை இன்று மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது.

இதன் மூலம் இஸ்ரோ 4 டன் வரை எடை கொண்ட ஏவுகணைகளை விண்ணில் செலுத்த முடியும் என்றும் இந்தியா விண்வெளி ஆராய்ச்சிக்காக வெளிநாடுகளைச் சார்ந்திருக்க அவசியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது என்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இப்போதைக்கு, இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் சந்திராயன் – 2 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவதில்தான் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி