ஆப்நகரம்

இந்தியாவின் எரிசக்தி தேவையை கனடா பூர்த்தி செய்யும்; போட்டாச்சு ஒப்பந்தம்!

இந்தியா-கனடா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

Samayam Tamil 23 Feb 2018, 5:49 pm
டெல்லி: இந்தியா-கனடா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
Samayam Tamil canada is a energy superpower it can fulfill our increasing says pm modi
இந்தியாவின் எரிசக்தி தேவையை கனடா பூர்த்தி செய்யும்; போட்டாச்சு ஒப்பந்தம்!


கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது குடும்பத்தாருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று குடியரசுத் தலைவர் மாளிகை வந்தார். காரில் வந்து இறங்கிய அவரை, பாரம்பரிய முறைப்படி பிரதமர் மோடி வரவேற்றார்.

பின்னர் சிவப்பு கம்பள வரவேற்பு, முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. முன்னதாக கனடா பிரதமர் 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இந்தியா-கனடா இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

தொடர்ந்து பிரதமர் மோடி பேட்டியளிக்கையில், பயங்கரவாதம் - தீவிரவாதம் என்பது இரு நாடுகளுக்கு முக்கிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இதனை எதிர்த்து போராடுவது நம் கடமை.

இந்தியாவில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை கனடா பூர்த்தி செய்யும். இந்திய மாணவர்களின் உயர் கல்விக்கு கனடா ஒரு முக்கிய இடமாக உள்ளது.

அரசியல் நோக்கங்களுக்கு மதத்தை தவறாகப் பயன்படுத்துவோர் மற்றும் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கு இங்கு இடமில்லை.

இருநாடுகளின் ஒருமைப்பாட்டுக்கு சவால் விடுபவர்களை நாம் சகித்துகொள்ளமாட்டோம் என்று மோடி கூறினார்.

Canada is a energy superpower it can fulfill our increasing says PM Modi.

அடுத்த செய்தி