ஆப்நகரம்

இனி ரேஷன் கடையிலும் ஸ்வைப் மிஷின் தான்..!

வரும் மார்ச் மாதம் முதல் ரேஷன் கடைகளில் ஸ்வைப் இயந்திரம் மூலம் பணம் செலுத்தும் திட்டத்தை கொண்டு வர உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

TNN 23 Dec 2016, 12:29 pm
வரும் மார்ச் மாதம் முதல் ரேஷன் கடைகளில் ஸ்வைப் இயந்திரம் மூலம் பணம் செலுத்தும் திட்டத்தை கொண்டு வர உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil cashless transactions in ration shops after march 2017
இனி ரேஷன் கடையிலும் ஸ்வைப் மிஷின் தான்..!


கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.மேலும் பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்கப்படுத்துவதற்காக பல்வேறு புதிய திட்டங்களையும் சலுகைகளையும் மத்திய அரசு தொடர்ந்து அறிவித்து வருகின்றது.

இந்நிலையில் இன்று டெல்லியில் மத்திய உணவு மற்றும் பகிர்மானத் துறையின் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கருப்புப் பண ஒழிப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் உணவுத் துறையில் சில மாற்றங்களை செய்ய முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி அடுத்தாண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஸ்வைப் இயந்திரத்தின் மூலம் பணம் செலுத்தி மட்டுமே பொருள் வாங்க முடியும் என மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.இந்த திட்டமானது நாடு முழுவதும் உள்ள 5.27 லட்சம் ரேஷன் கடைகளில் படிப்படியாக அமல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் மூலம் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அனைத்து பொருட்களையும் பணம் கொடுத்து வாங்க முடியாது.கிரடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தியே ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியும்.

Cashless transactions in Ration shops after March 2017

அடுத்த செய்தி