ஆப்நகரம்

ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய மத்திய அரசு அதிகாரி கைது!

டெல்லியில் நிலுவையில் உள்ள ரசீதுகளுக்கு அனுமதி வழங்கிய ஆர்.கே. காத்ரி என்ற மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் அதிகாரியை சிபிஐ போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 15 Sep 2018, 12:18 am
டெல்லியில் நிலுவையில் உள்ள ரசீதுகளுக்கு அனுமதி வழங்கிய ஆர்.கே. காத்ரி என்ற மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் அதிகாரியை சிபிஐ போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil police-generic-


இந்திய மருந்து மற்றும் மருந்து பொருட்கள் கழகத்தின் நிர்வாக இயக்குனராக பொறுப்பில் இருப்பவர் ஆர்.கே. காத்ரி. இவர் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பு செயலாளராகவும் உள்ளார்.

இந்நிலையில், மருந்து பொருள் விற்பனை ஏஜென்ட் ஒருவர் தனக்கு வழங்கப்பட வேண்டிய பணம் நிலுவையில் உள்ளதாக கூறி அதற்கான ரசீதுகளையும் சமர்பித்துள்ளார். இதையடுத்து அவருக்கு நிலுவை பணம் ரசீதுகளுக்கு ஒப்புதல் வழங்க 10 லட்சம் ரூபாய் காத்ரி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த ஏஜென்ட் சிபிஐயிடம் புகார் அளித்தார்.

பின்னர், சிபிஐயின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய நோட்டுக்களை அந்த ஏஜென்ட் காத்ரியிடம் லஞ்மாக கொடுத்தார். அப்போது காத்ரி அந்த ரூபாய் நோட்டுக்களை பெற, அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அடுத்த செய்தி