ஆப்நகரம்

24 மணி நேரத்தில் 4வது முறை ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள்!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் டெல்லி இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து 4வது முறையாக சென்றுள்ளனர்.

Samayam Tamil 21 Aug 2019, 10:22 am
கடந்த 2007ஆம் ஆண்டு ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு, பல கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீட்டிற்கு முறைகேடாக அனுமதி அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதற்கு அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உடந்தையாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
Samayam Tamil P Chidambaram


இதுகுறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தொடர்ந்து முன் ஜாமீன் பெற்று வந்தார்.

Also Read: ப. சிதம்பரம் கைதா? இன்னும் கொஞ்சம் நேரத்தில் தெரிந்துவிடும்!!

இந்நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று நீதிமன்றத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முறையிட்டனர்.

இதையடுத்து நேற்று ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்றது. அப்போது ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

நேற்று மாலை டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக சென்றனர். ஆனால் அவர் வீட்டில் இல்லை. இதையடுத்து 2 மணி நேரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு, அவர் வீட்டின் முன்பு நோட்டீஸ் ஒட்டி விட்டு சென்றனர்.

Also Read: கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்? ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!

ஆனால் ப.சிதம்பரம் ஆஜராகவில்லை. எங்கு இருக்கிறார் என்றும் தெரியவில்லை. இதையடுத்து இன்று காலை 8.10, 8.45 மணியளவில் மீண்டும் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் வந்தனர். ஆனால் அவர் இல்லாததால் திரும்பிச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து 4வது முறையாக 9.35 மணியளவில் சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளனர். ஆனால் ப.சிதம்பரம் வீட்டில் இல்லை. எங்கு இருக்கிறார் என்றும் தெரியவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read: ப.சிதம்பரம் நேரில் ஆஜராக சம்மன்; இம்முறை சிக்கிக் கொண்டது இப்படியொரு வழக்கில்...!

இந்த சூழலில் ப.சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, இன்று காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி