ஆப்நகரம்

தேர்வெழுத வரும் மாணவர்கள் சேனிட்டைசர் கொண்டு வரணும்!

நாடு முழுவதும் நடத்தப்படாமலிருக்கும் சிபிஎஸ்இ தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 18 May 2020, 8:00 pm
நாடு முழுவதும் நடத்தப்படாமல் உள்ள சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஜூலை ஒன்றாம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடக்கும் என அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், இப்போது அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil தேர்வெழுத வரும் மாணவர்கள் சேனிட்டைசர் கொண்டு வரணும்!
தேர்வெழுத வரும் மாணவர்கள் சேனிட்டைசர் கொண்டு வரணும்!


கோவிட்-19 ஊரடங்கு காரணமாக மார்ச் 25ஆம் தேதி நடத்தப்பட வேண்டிய சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வுகள் வடகிழக்கு டெல்லியில் மட்டும் நடத்தப்படாமல் உள்ளது.

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கி ஜூலை 15ஆம் தேதிக்குள் 4 நாட்கள் நடக்கும். சமூக அறிவியல் பாடத் தேர்வு தொடங்கி, அறிவியல் பாடத்திற்கான தேர்வு மறுநாள் நடத்தப்படும்.

இதனடிப்படையில் மாணவர்கள் தயாராகிக் கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். "10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹிந்தி மொழி இரு பிரிவுகளுக்கானத் தேர்வு நடத்தப்படும். அதேபோல் ஜூலை 15ஆம் தேதி ஆங்கில மொழிக்கான இரு பிரிவுகளுக்கானத் தேர்வுகள் நடத்தப்படும்" என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

10th public exam: 10ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்ய சில காரணங்கள்

தேர்வெழுத வரும் மாணவர்கள் முகக் கவசம், கையுறைகள் அணிந்து வர வேண்டும். மேலும் சேனிட்டைசர்களை சொந்த செலவில் தனியாக பெற்று வரவேண்டும்.

அட்டவணை


அட்டவணை2


12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை ஒன்றாம் தேதி, ஹோம் சயின்ஸ் பாடத் தேர்வு நடத்தப்படுகிறது. மறுநாள் ஹிந்தி மொழித் தேர்வு என ஜூலை 15ஆம் தேதியோடு தேர்வுகள் நடத்தி முடிக்கப்படுகிறது.

அடுத்த செய்தி