ஆப்நகரம்

நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே வினாத்தாள்: சிபிஎஸ்இ அறிவிப்பு

2018 ஆம் ஆண்டு நடக்கும் நீட் தேர்வில் நாடு முழுவதும் ஒரே வினாத்தாள் விநியோகிக்கப்படும் என சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளது

TNN 12 Dec 2017, 5:43 pm
2018 ஆம் ஆண்டு நடக்கும் நீட் தேர்வில் நாடு முழுவதும் ஒரே வினாத்தாள் விநியோகிக்கப்படும் என சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளது.
Samayam Tamil cbse ugc net 2018 same questionnaires will be distributed nationwide
நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே வினாத்தாள்: சிபிஎஸ்இ அறிவிப்பு


சிபிஎஸ்இ நீட் எனப்படும் மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது. இதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது. குறிப்பாக தமிழக மாணவர்கள் இதை கடுமையாக எதிர்த்தனர்.

இதை ரத்து செய்யக் கூறி அரியலூர் மாணவி அனிதா, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அது தள்ளுபடியானதைத் தொடர்ந்து வழக்கு தள்ளுபடியான நிலையில் அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதனால், தமிழகம் முழுவதும் நீட் தேர்விற்கு எதிர்ப்பு அலைகள் கிளம்பின.

இந்நிலையில், இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வின்போது, வினாத்தாள்கள் மாநிலங்கள் வாரியாக வழங்கப்பட்டதாகவும், பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் வினாத்தாள் மிக கடினமாக இருந்ததாகவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஆஜரான சிபிஎஸ்இ, நீட் தேர்வில் உள்ள இந்தக் குளறுபடிகளை தவிர்க்க நீதிபதிகள் முன் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தது. மேலும், அடுத்த ஆண்டு நடைபெறும் நீட் தேர்வின் போது, நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள்களை விநியோகிக்க உள்ளதாகவும் தெரிவித்தது.

அடுத்த செய்தி