ஆப்நகரம்

மீண்டும் சூடு பிடிக்கும் வியாபம் ஊழல்: மற்றொருவரை கைது செய்தது சிபிஐ

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற வியாபம் முறைகேடு வழக்கில் மேலும் ஒருவரை சிபிஐ கைதுசெய்துள்ளது.

TNN 26 Nov 2017, 6:34 pm
போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற வியாபம் முறைகேடு வழக்கில் மேலும் ஒருவரை சிபிஐ கைதுசெய்துள்ளது.
Samayam Tamil central bureau of investigation arrested indores arun arora in connection with vyapam scam
மீண்டும் சூடு பிடிக்கும் வியாபம் ஊழல்: மற்றொருவரை கைது செய்தது சிபிஐ


மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பணியாளர் தேர்வு வாரியமாகச் செயல்படும் வியாபம் அமைப்பில் மருத்துத்துறை நுழைவுத் தேர்வுகளில் ஏராளமான முறைகேடுகள் நடப்பது கண்டறியப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பலர் அடுத்தடுத்து தற்கொலை, கொலை என இறந்ததால் இந்த வழக்கு மிகவும் சிக்கலானது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஆளுநர் ராம் நரேஷ் ஆகியோருக்கும் தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடந்த 23ஆம் தேதி இந்த வழக்கில் தொடர்புடைய வியாபம் அமைப்பின் ஊழியர்கள் 4 பேர் உட்பட 592 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
Bhopal: Central Bureau of Investigation arrested Indore's Arun Arora in connection with VYAPAM Scam — ANI (@ANI) November 26, 2017 இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய இந்தூரைச் சேர்ந்த அருண் அரோரா என்பவரை போபாலில் வைத்து சிபிஐ இன்று கைது செய்துள்ளது. அருண் அரோரா வியாபம் வழக்கில் தொடர்புடைய இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரியின் தலைவராக இருந்தவர் ஆவார். கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரை ஒருநாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

இதனால், சிறிது காலம் கவனிக்கப்படாமல் இருந்த வியாபம் ஊழல் வழக்கு மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளதாக கருதப்படுகிறது.

அடுத்த செய்தி