ஆப்நகரம்

3,500 ஆபாச இணையதளங்கள் அதிரடி முடக்கம்!

மத்திய அரசானது ஒரே மாதத்தில் 3,500 ஆபாச இணையதளங்களை அதிரடியாக முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

TOI Contributor 14 Jul 2017, 9:20 pm
டெல்லி : மத்திய அரசானது ஒரே மாதத்தில் 3,500 ஆபாச இணையதளங்களை அதிரடியாக முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
Samayam Tamil central government banned 3500 porn websites within one month
3,500 ஆபாச இணையதளங்கள் அதிரடி முடக்கம்!


ஆபாச இணையதளங்கள் வளரும் பள்ளி பருவத்தினருக்கு பெரும் கேடாக இருந்துவரும் நிலையில் பலரும் அவற்றை முடக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துவருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பான கோரிக்கை அடங்கிய மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது. ஆபாச இணையதளங்கள் குறித்து மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பியது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகள் ஆபாச படங்கள் பார்ப்பதை தவிர்க்க ஜாமர் கருவிகள் பொருத்த மத்திய அரசு பள்ளி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார். ஆனால் அனைத்து பள்ளிகளிலும் ஜாமர் அமைத்து ஆபாச இணையதளங்களை முடக்குவது சாத்தியம் அற்றது என்று கூறிய அவர், கடந்த ஒரு மாதத்தில் 3500 குழந்தைகள் சார்ந்த இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதனையடுத்து மத்திய அரசின் நடவடிக்கை குறித்த அறிக்கையை இரண்டு தினங்களில் தாக்கல் செய்யவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி