ஆப்நகரம்

கொரோனா: மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஹாப்பி நியூஸ்!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்று இன்று(மார்ச் 19) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Mar 2020, 3:45 pm
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, அரசு ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்தே ( ஒர்க் ஃப்ரம் ஹோம்) பணிபுரிய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil கொரோனா: மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஹாப்பி நியூஸ்!


கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றன.

இதன்படி , நாடு முழுவதும் பள்ளிகளுக்கு வரும் 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் வரும் 31 ஆம் தேதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் காவு வாங்க காத்திருக்கும் கொரோனா வைரஸ்... எப்படி பாதுகாப்பாக இருப்பது?...

சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி போன்ற பெருநகரங்களில் உள்ள ஐடி நிறுவனங்கள் உள்ளிட்டவை தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தபடிய பணிபுரிய அறிவுறுத்தியுள்ளன.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தற்போது மற்றொரு முக்கிய முடிவை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களில் (டி மற்றும் சி பிரிவு) 50 சதவீதம் பேர் மட்டும் இனி நாள்தோறும் அலுவலகத்துக்கு வந்தால் போதும்.

கர்நாடகாவிலும் கையில் முத்திரை: ஏன்? எதற்காக?

மீதமுள்ள 50 சதவீதம் அரசு ஊழியர்கள் அலரவர் வீட்டில் இருந்த பணியாற்ற வேண்டும்; அலுவலகத்துக்கு வரும் பணியாளர்களின் பணி நேரமும் மாற்றியமைக்கப்படும். மறுஉத்தரவு வரும்வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்று மத்திய பணியாளர் நலத் துறை இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி