ஆப்நகரம்

போச்சா! இளைஞர்கள் கதி அவ்வளவு தானா? ஓய்வு பெற்றோருக்கு மத்திய அரசு மீண்டும் பணி!

மத்திய அரசின் காலிப் பணியிடங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு அரசு வாய்ப்பளிக்க இருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 1 Aug 2019, 3:07 pm
மத்தியில் பாஜக தலைமையிலான அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து பல்வேறு மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அசுர வேகத்தில் நிறைவேற்றி வருகின்றனர்.
Samayam Tamil Jobs


இதேபோல் அரசுப் பணிகளில் ஏராளமான மாற்றங்களைக் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் அரசுப் பணிகளில் இடைக்கால அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Also Read: உஷார் வாகன ஓட்டிகளே... அதிகரிக்கும் சாலை விதிமீறல்கள் - மிகக் கடுமையான தண்டனைகள்!

அதாவது, நிரந்தர அதிகாரிகளின் பணியிடங்களைக் குறைத்து, அதன்மூலம் செலவினங்களைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த பணியிடங்களில் ஏற்கனவே பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

அதுவும் குறிப்பிட்ட சில பிரிவுகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் ரயில்வே மற்றும் அறிவியல் ஆகிய துறைகளும் அடங்கும்.

Also Read: புதிய கல்விக் கொள்கையில் என்ன பிரச்சனை? மத்திய அமைச்சருடன் தமிழக எம்.பிக்கள் ஆலோசனை!

இந்தப் பணியாளர்களுக்கு ரூ.35,000 என்ற அளவில் ஊதியம் வழங்கப்படும். இவ்வாறு நியமிக்கப்படும் ஊழியர்களுக்கு அரசின் எந்தவொரு சலுகையும் கிடைக்காது. மேலும் முன்னறிவிப்பின்றி எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படும் அபாயமும் இருக்கிறது.

மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். அரசு வேலைகளில் எப்படியாவது அமர்ந்து விட வேண்டும் என்று பல ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகின்றனர்.

Also Read: Aircel Maxis Case: கைது செய்ய தடை நீட்டிப்பு; தொடர்ந்து எஸ்கேப் ஆகும் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம்!

அவர்களின் கனவில் மண்ணைத் தூற்றி போடும் வகையில் அரசின் செயல்பாடு இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர்.

அடுத்த செய்தி