ஆப்நகரம்

மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை - மத்திய அரசு எச்சரிக்கை

மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்பதை அறிவித்து மத்திய அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

Samayam Tamil 22 Apr 2020, 3:33 pm
கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் நாடு முழுவதும் அரும்பணியாற்றி வருகின்றனர். இந்த சூழலில் அவர்களது பாதுகாப்புக்கு அனைத்து மாநில அரசுகளும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
Samayam Tamil தூய்மை பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை


கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களை அடக்கம் செய்வதில் பொதுமக்கள் தரப்பிலிருந்து வலுக்கும் எதிர்ப்பு சம்பவங்களால் அயராது உழைக்கும் மருத்துவர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ள அரசுகள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அச்சமின்றி தங்களது பணியை மேற்கொள்ளலாம் என உறுதி அளித்துள்ளன.

மருத்துவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும்: அமித் ஷா திட்டவட்டம்

இந்த நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களை தாக்கினால் 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா போர்க்களத்தில் சுகாதார ஊழியர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இந்த நடவடிக்கைக்கு இந்த அவசர சட்டம் வழிவகை செய்கிறதென மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

அடுத்த செய்தி