ஆப்நகரம்

குடியரசுத் தலைவர், பிரதமருக்கு ரூ.4,469 கோடி மதிப்பில் தனி விமானங்கள் வாங்கும் மத்திய அரசு!

குடியரசுத் தலைவர், பிரதமருக்கு தனித்தனி விமானங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 13 Mar 2018, 3:32 pm
டெல்லி: குடியரசுத் தலைவர், பிரதமருக்கு தனித்தனி விமானங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
Samayam Tamil central govt plans to buy separate flights for pm and president in india
குடியரசுத் தலைவர், பிரதமருக்கு ரூ.4,469 கோடி மதிப்பில் தனி விமானங்கள் வாங்கும் மத்திய அரசு!


நாட்டின் முதல் குடிமகன் என்று அழைக்கப்படும் குடியரசுத் தலைவர், ஆட்சிப் பொறுப்பில் மத்தியில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் பிரதமர் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வது உண்டு.

தற்போது இவர்கள் போயிங் 747 விமானத்தை பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் இரு போயிங் 77-300 இஆர் விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் வாங்கியுள்ளது.

இதில் ஓய்வு அறை, பத்திரிகையாளர்கள் சந்திப்பு அறை, மருத்துவ சிகிச்சை அறை, வைஃபை வசதி போன்றவை இடம்பெற்றுள்ளன. மேலும் எந்தவித ஆயுதங்களாலும் இந்த விமானத்தை தாக்க முடியாது.

டெல்லியில் இருந்து அமெரிக்காவிற்கு இடைநில்லாமல் சென்று சேரமுடியும். அதற்கான எரிபொருள் நிரப்பும் வசதியும் உள்ளது. இதுபோன்ற விமானங்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதனை குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் ஆகியோர் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவர். இதற்காக அடுத்த நிதியாண்டில் ரூ.4,469 கோடி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விலைமதிப்பற்ற போயிங் விமானங்கள் வாங்கப்பட்ட பின், சிறப்பு வசதிகளை சேர்த்துக் கொள்ள முடியும். இதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த விமானங்களை இயக்க சிறப்பு பயிற்சி பெற்ற 44 பைலட்கள் தயார் செய்யப்படுகிறார்கள்.

Central Govt plans to buy separate flights for PM and President in India.

அடுத்த செய்தி