ஆப்நகரம்

கருத்துச் சொல்ல வாங்க... பொதுமக்களுக்கு மத்திய அரசு அழைப்பு!!

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளை கூறலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

Samayam Tamil 20 Dec 2019, 11:53 pm
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் (மக்களவை, மாநிலங்களவை) அண்மையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாகியுள்ளது. இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான விதிமுறைகளை வகுப்பதில் மத்திய அரசு தற்போது தீவிரம் காட்டி வருகிறது.
Samayam Tamil கருத்துச் சொல்ல வாங்க... பொதுமக்களுக்கு மத்திய அரசு அழைப்பு!!


இந்த நிலையில், இச்சட்டத்துக்கு எதிராக கடந்த பத்து நாட்களுக்கு மேலாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் சற்று அடங்கியுள்ளது. அதேசமயம் மேற்கு வங்கம், டெல்லி, உத்தரப் பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

குடியுரிமை சட்டம் : மத்திய அரசுக்கு சோனியா எச்சரிக்கை!!

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தொடங்கி, சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் வரை, நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களும் களமிறங்கியுள்ளதால், போராட்டம் வேற லெவலை நோக்கி போய் கொண்டிருக்கிறது.

பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் பங்களிப்பின் காரணமாக இப்போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, குடியுரிமை சட்டத்தை முன்வைத்து நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்தும், இந்தச் சட்டத்தை அமல்படுத்துவது பற்றியும் உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை நடத்தியுள்ளது.

குடியுரிமை சட்டம் சரியில்லை என ஐநா சொல்லுது!

இந்த ஆலோசனைக்கு பின்னர், அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகள், விவாதங்களுக்கு பிறகு தான் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. தற்போது அமல்படுத்தப்படவுள்ள இந்தச் சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்துக்கு செல்லவும், போராட்டம் நடத்தவும் மக்களுக்கு உரிமை உள்ளது.

அதேசமயம் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை வகுப்பதில் அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. இந்த விதிமுறைகளை வகுப்பது தொடர்பாக பொதுமக்களின் பரிந்துரைகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி