ஆப்நகரம்

காற்றை மாசுபடுத்தினால் ரூ.1 கோடி அபராதம்: மத்திய அரசு அதிரடி!

தலைநகர் டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான தண்டனையுடன், அபராதம் விதிக்க வழிவகை செய்யும் அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது

Samayam Tamil 29 Oct 2020, 6:20 pm
விவசாயிகள் அறுவடைக் காலம் முடிந்து விவசாயக் கழிவுகளை எரிப்பது, புதிய கட்டுமானங்கள், பழைய கட்டடங்கள் இடிப்பு உள்ளிட்டவைகள் காற்று மாசுவுக்கு காரணமாக கூறப்படுகிறது. காற்று மாசுவால் பொதுமக்கள் சுவாசப் பிரச்சினை, கண் எரிச்சல் உள்ளிட்டவற்றால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தியா முழுவதும் 12 லட்சத்துக்கும் மேலானோர் காற்று மாசுவால் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பின் தரவுகள் கூறுகிறது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


குறிப்பாக, தலைநகர் டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் அளவுக்கு அதிகமான காற்று மாசுபாடு ஏற்படுகிறது. டெல்லியில் இன்று காலை நிலவரப்படி மட்டும் காற்று தரக் குறியீடு அபாய அளவை தாண்டியே இருந்தது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த அந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த கடுமையான தண்டனையுடன், அபராதம் விதிக்க வழிவகை செய்யும் அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மேலும், காற்று மாசை தடுப்தபற்காக தனியாக ஒரு ஆணையம் அமைக்கவும் அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பண்டிகை சீசனில் பெரிய ஆபத்து; வசமா சிக்கப் போகும் மாநிலங்கள்!

மத்திய அரசு உத்தரவு


சட்டத்தை மீறி யாராவது காற்று மாசு ஏற்படுத்தினால் அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.1கோடி அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டையும் விதிக்க இந்த சட்டத்தின் கீழ் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி