ஆப்நகரம்

Circus Animals: சர்க்கஸில் இனி எந்த மிருகங்களையும் பயன்படுத்தக் கூடாது- வருகிறது புதிய உத்தரவு..!!

சர்க்கஸில் அனைத்து மிருகங்களையும் பயன்படுத்துவதற்கு விரைவில் தடை விதிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 30 Nov 2018, 11:43 am
வனவிலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர்களின் வலுத்து வரும் கோரிக்கை காரணமாக சர்க்கஸில் மிருகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
Samayam Tamil Circus
சர்க்கஸில் அனைத்து மிருகங்களுக்கும் தடை


சர்க்கஸ் என்றால் சாகசம் செய்யும் மிருகங்கள், அவற்றுடன் அசாத்திய திறமை காட்டும் கலைஞர்கள் ஆகியவை தான் நம் நினைவுக்கு வரும். இன்றைய மாறிவரும் உலகில், இந்த பொழுதுப்போக்கு அம்சங்களுக்கு பெரியளவில் வரவேற்பு இல்லை என்றாலும், சர்க்கஸை ஆவலுடன் எதிர்பார்க்கும் பார்வையாளர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

வன நிலப்பரப்பில் வாழும் சிங்கம், புலி, கரடி, யானை, குரங்கு போன்ற மிருகங்கள் நம் கண் முன் பல சாகசங்கள் செய்வதை பார்க்கும்போது மெய்சிலிர்ப்பு உண்டாகும். இதுதான் மக்கள் சர்க்கஸை விரும்பவதற்காக முக்கிய காரணம். இந்நிலையில் வனவிலங்குகளை கூண்டில் அடைத்து சித்ரவதை செய்யக்கூடாது என பல விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அது தொடர்ந்து வலுப்பெற்றதால், வனவிலங்குகளை கூண்டில் வைத்து சர்க்கஸ் காட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

தொடர்ந்து நாய், யானை, குதிரை மற்றும் கிளிகளை வைத்து மட்டுமே பல இடங்களில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பிறகு அதையும் தடைசெய்யக்கோரி விலங்கினங்கள் பாதுகாப்பு அதிகாரிகள் கோரிக்கை விடுத்து வருந்தனர். இதற்காக மத்திய அரசு புதிதாக வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்துள்ளது. அதில் மிருகங்களை காட்சி பொருளாகவோ, சித்ரவதை செய்து துன்புறுத்துவதை தடை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையை உடனடியாக சர்க்கஸிலும் அமல்படுத்த வேண்டும் என மிருகங்கள் பாதுகாப்பு ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனால் சர்க்கஸில் குதிரை, நாய், கிளிகள், யானைகள் போன்ற விலங்குகளை பயன்படுத்த தடை விதிப்பது குறித்து மத்தியரசு ஆலோசித்து வருகிறது. ஏற்கனவே டிவி, செல்போன் மற்றும் இணையதளம் வருகையால் சர்க்கஸ் தொழில் நலிவடைந்து வருகிற.து,

அதையே நம்பி இருக்கும் பல கலைஞர்கள் வாழ்வதாதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் குதிரை, நாய், கிளிகள், யானைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டால், சர்க்கஸ் தொழில் அடியோடு அழிந்துவிடும் என அதில் பணியாற்றும் ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்தியாவை பொறுத்த வரை கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் மட்டும் தான் சர்க்கஸ் கலைஞர்கள் அதிகம். சர்க்கஸுக்கு போதிய வரவேற்பு இல்லாததால், சர்க்கஸ் கலைஞர்கள் பலர் ஏற்கனவே சினிமாக்களில் ஸ்டெண்ட் கலைஞர்களாகவும், அடிப்படை பணியாளர்களாகவும் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த புதிய உத்தரவு அமல்படுத்தப்பட்டால், எஞ்சியிருக்கும் சர்க்கஸ் கலைஞர்களும் வாழ்வதாரம் இழந்து தவிக்கும் நிலை ஏற்படும்.

அடுத்த செய்தி