ஆப்நகரம்

மேகதாது அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு!

சமீபத்தில் கர்நாடகாவின் முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா நேற்று டெல்லி சென்று, பிரதமர் மோடியை சந்தித்து, மேகதாது அணை கட்ட ஆய்வு மேற்கொள்ள அனுமதிக்குமாறு வலியுறுத்தினார். கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவது குறித்து ஆய்வு நடத்த, மத்திய அரசு இன்று அனுமதி மறுத்துள்ளது.

Samayam Tamil 7 Aug 2019, 12:36 pm
கர்நாடக மாநிலம் காவிரியாற்றின் குறுக்கே, மேகதாது அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.
Samayam Tamil மேகதாது அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு!
மேகதாது அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு!


கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதற்கு தமிழக அரசு, தொடர்ந்து கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது.

மேலும் மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. காவிரி நடுவர் மன்றத்திலும் தமிழக அரசு இந்த பிரச்சினையை எழுப்பி உள்ளது. இருப்பினும் தமிழகத்தின் எதிர்ப்பை மீறி மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிரமாக உள்ளது.

மோடி ஜீ-க்கு நன்றி! கடைசி ட்வீட் போட்ட சுஷ்மா ஸ்வராஜ்!

அதன்படி, கர்நாடகா மேகதாதுவில் அணைகட்டுவது குறித்து ஆய்வு நடத்த அனுமதி கேட்டு கடந்த ஜூலை மாதம் மத்திய சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் குழுவிட்டம் விண்ணப்பம் அளித்தது. இந்நிலையில், சமீபத்தில் கர்நாடகாவின் முதல்வராக பதவியேற்ற பிறகு நேற்று முதல்முறையாக டெல்லி சென்ற எடியூரப்பா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மேகதாது அணை கட்ட ஆய்வு மேற்கொள்ள அனுமதிக்குமாறு வலியுறுத்தினார்.

இத்தகைய சூழலில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவது குறித்து ஆய்வு நடத்த, மத்திய அரசு இன்று அனுமதி மறுத்துள்ளது. தமிழக அரசின் எதிர்ப்பை சுட்டிக்காட்டி கர்நாடகாவிற்கு அனுமதி அளிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர்கள் குழு மறுப்பு தெரிவித்துள்ளது.

#ThankYouகலைஞர் : தமிழகத்தை செதுக்கிய சிற்பியை நினைவு கூறும் நெட்டிசன்கள்...!

இதுகுறித்து சுற்றுச்சூழல் அமைச்சகம் தரப்பில் கூறுகையில்; தமிழகம்- கர்நாடகா இடையே, சுமூக தீர்வு ஏற்பட்டால் மட்டுமே, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த அனுமதி வழங்கப்படும்.

மேகதாது தவிர அணை கட்டுவதற்கு மாற்று இடத்தை குறிப்பிட வேண்டும். ஆனால் இதுவரை கர்நாடகா அரசு மாற்று இடத்தை தெரிவிக்கவில்லை. எனவே, மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு, ஆய்வு நடத்த சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் குழு அனுமதி மறுத்துள்ளது.

நீங்கள் செவ்வாய் கிரகத்தில் சிக்கிக் கொண்டாலும் காப்பாற்றுவேன்: சுஷ்மாவின் பாசம்!!

அடுத்த செய்தி