ஆப்நகரம்

20 லட்சம் காலி இடங்களை நிரப்ப மத்திய அரசு திட்டம்!

காலியாக உள்ள 20 லட்சம் வேலையிடங்களை நிரப்ப மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNN 28 Sep 2017, 12:37 pm
டெல்லி: காலியாக உள்ள 20 லட்சம் வேலையிடங்களை நிரப்ப மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil centre states to fill up 2 million vacancies
20 லட்சம் காலி இடங்களை நிரப்ப மத்திய அரசு திட்டம்!


மத்திய அரசின் தொழிலாளர் அமைச்சகம் காலியாக உள்ள 20 லட்சம் காலியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல்கட்டமாக பொதுப்பணித்துறை மற்றும் இதர துறைகளில் உள்ள காலியிடங்கள் பற்றி அந்தந்த துறைகளிடமிருந்து தகவல்கள் பெறப்படும். இதன்மூலம், காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தினசரி, வாரம் மற்றும் மாதம் வாரியாக ஆட்கள் நியமிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக மத்திய அரசில் காலியாக 6,00,000 காலியிடங்கள் இந்த முறைப்படி நிரப்பப்படும். இந்தத் திட்டம் வெற்றிப் பெற்றால், இது மாநிலங்களுக்கு விரிவாக்கப்படும். இதன்மூலம், 20 வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தனியார் துறையில் உள்ள வேலைவாய்ப்புகளை அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஆன்லைன் போர்ட்டல் உருவாக்கப்பட்டுள்ளது.

வேலையில்லா திண்டாட்டம் பற்றி எழும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாகவே இந்தத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில், இந்தியாவில் இருக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்தை விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Centre, states to fill up 2 million vacancies.

அடுத்த செய்தி