ஆப்நகரம்

மானத்தை வாங்குது சிபிஐ: ப.சிதம்பரம் புலம்பல்

ஓயாமல் ஏதாவது சோதனை நடத்தி கண்ணியத்தைக் கெடுப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறை மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

Samayam Tamil 24 Feb 2018, 3:05 pm
ஓயாமல் ஏதாவது சோதனை நடத்தி கண்ணியத்தைக் கெடுப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறை மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
Samayam Tamil chidambaram moves sc for right to privacy right to live in dignity
மானத்தை வாங்குது சிபிஐ: ப.சிதம்பரம் புலம்பல்


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசில் நிதி அமைச்சராக இருந்தார். அப்போது ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடியை முதலீடு செய்வதற்கு சட்ட விரோதமாக ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. ஐ.என்.எஸ். மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடு அளிக்கப்பட்டதிலும் வீதிமீறல் நடந்ததாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மாறிமாறி பல முறை சோதனை நடத்தின. இந்த சோதனைகளில் பல ஆவணங்களும் சிக்கியுள்ளன.

இந்த நிலையில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை ஓயாமல் ஏதாவது சோதனை நடத்தி கண்ணியத்தைக் கெடுப்பதாக ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

“சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் தொடர் சோதனைகள் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இது அரசியல் பழிவாங்கும் முயற்சி. எனது தனி உரிமையும், கண்ணியமும் பாதுகாக்கப்பட வேண்டும்.” என்று ப.சி. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி