ஆப்நகரம்

இந்தியாவில் சிக்குன்குனியா, டெங்கு பரவுகிறது; 12,000 பேர் பாதிப்பு

நாடு முழுவதும் சிக்குன்குனியா, டெங்கு நோய் காரணமாக, 12,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

TNN 14 Sep 2016, 5:22 pm
நாடு முழுவதும் சிக்குன்குனியா, டெங்கு நோய் காரணமாக, 12,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil chikungunya dengue sting india with over 12000 cases across country and 9 deaths in delhi
இந்தியாவில் சிக்குன்குனியா, டெங்கு பரவுகிறது; 12,000 பேர் பாதிப்பு

தலைநகர் டெல்லியில் மட்டும் இதுவரை 10 பேர் சிக்குன்குனியா மற்றும் டெங்கு பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரம் பேர் டெங்கு பாதித்தும், 1,158 பேர் சிக்குன்குனியா பாதித்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்திய அளவில் மொத்தம் 12,255 பேருக்கு இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக, கர்நாடகா மாநிலத்தில் 8,941 பேர் இந்த நோய்களால் பாதித்துள்ளதாகவும், ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் சிக்குன்குனியா, டெங்கு பாதிப்பை தவிர்க்கும் விதமாக, போர்க்கால அடிப்படையில் நாடு முழுவதும் சுகாதார விழிப்புணர்வு பணிகளை முடுக்கிவிட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

அடுத்த செய்தி