ஆப்நகரம்

இரண்டாவது முறை சிக்கன்குனியா வராது!

சிக்கன்குனியா வைரஸ் இரண்டாவது முறையாக ஒருவரை தாக்குவதற்கு வாய்ப்பு குறைவு என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

TOI Contributor 24 Sep 2016, 2:12 pm
புதுடில்லி: சிக்கன்குனியா வைரஸ் இரண்டாவது முறையாக ஒருவரை தாக்குவதற்கு வாய்ப்பு குறைவு என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil chikungunya virus not likely to infect twice
இரண்டாவது முறை சிக்கன்குனியா வராது!


டெங்கு வைரஸில் உள்ளது போல சிக்கன்குனியா வைரஸில் ஸ்டிரோட்டைப்புகள் கிடையாது. அதனால் இது மீண்டும் தாக்குவதற்கு குறைந்த அளவே சாத்தியம் உள்ளது என எய்ம்ஸ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து எய்ம்ஸ் அதிகாரி ஒருவர் கூறியது:
டெங்கு வைர்ஸில் மொத்தமாக நான்கு வகையான ஸ்டிரோட்டைப்புகள் இருக்கும் . ஆனால் சிக்கன்குனியாவில் ஒரேவகையான ஸ்டிரோட்டைப்பு மட்டுமே உள்ளது. அதனால் அது பாதிப்பு ஏற்படுத்தியவருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படுத்துவது அரிதான விஷயம். கேன்சர் போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அவர்களை தாக்க மீண்டும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி