ஆப்நகரம்

ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு கொடுத்ததால் குழந்தை பலி

மத்தியப் பிரதேச மாநிலத்தில் குழந்தைகளுக்கு ஆக்சிஜன் கொடுப்பதற்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு கொடுத்ததில் ஒரு குழந்தை இறந்தது. மற்றொரு குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளது.

TOI Contributor 30 May 2016, 9:35 am
மத்தியப் பிரதேச மாநிலத்தில் குழந்தைகளுக்கு ஆக்சிஜன் கொடுப்பதற்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு கொடுத்ததில் ஒரு குழந்தை இறந்தது. மற்றொரு குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளது.
Samayam Tamil child given nitrous oxide instead of oxygen dies
ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு கொடுத்ததால் குழந்தை பலி

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் மகாராஜா யஸ்வந்த்ராவ் மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்தது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை ஆக்சிஜன் கொடுப்பதற்கு பதில் 8 வயது ஆயுஸ் என்ற ஆண் குழந்தைக்கு நைட்ரஸ் ஆக்சைடு கொடுத்துள்ளனர். பொதுவாக இது மயக்கத்தை ஏற்படுத்தும் மருந்து. இதைக் கொடுத்த பின்னர் ஆயுஸ் பரிதாபமாக இறந்தான். இதேபோல் 18 மாதங்களே ஆன ராஜ்வீர் என்ற குழந்தைக்கும் கொடுத்துள்ளனர். தற்போது இந்தக் குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

இதுகுறித்து மருத்துவமனை அறுவை சிகிச்சை டாக்டர் சுமித் சுக்லா கூறுகையில், ''அறுவை சிகிச்சை செய்யும் அறையில் இரண்டு வர்ணங்கள் பூசப்பட்ட குழாய்கள் உள்ளன. இதில், ஆக்சிஜன் வரும் குழாயில் தவறு நிகழ்ந்துள்ளது'' என்றார்.

அடுத்த செய்தி