ஆப்நகரம்

குறைந்தது குழந்தைகளின் இறப்பு விகிதம்; சுகாதாரத்தில் முன்னேற்றம் காணுமா இந்தியா!

குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

TNN 30 Sep 2017, 8:56 am
டெல்லி: குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil child mortality rate decreases in india
குறைந்தது குழந்தைகளின் இறப்பு விகிதம்; சுகாதாரத்தில் முன்னேற்றம் காணுமா இந்தியா!


மத்திய அரசு குழந்தைகளின் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் குறித்த செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி,

குழந்தைகளின் இறப்பு விகிதம்:

* 2015 - 37 ( 1000 குழந்தைகளுக்கு)

* 2016 - 34 ( 1000 குழந்தைகளுக்கு)

கடந்த 2015ஆம் ஆண்டில் மட்டும், இந்தியாவில் 9 லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

இதேபோல் 2016ஆம் ஆண்டில் 8 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகள் உயிரிந்துள்ளன. 2015ஆம் ஆண்டை, 2016ல் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளது. குறிப்பாக காய்ச்சல் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளும் குறைந்தன.

தமிழகத்தில் 1000 குழந்தைகளுக்கு 17 குழந்தைகள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் 2015ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2016ல் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

அதன்படி, இந்தியாவில் குழந்தைகளின் இறப்பு விகிதம் 8% அளவிற்கு குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Child mortality rate decreases in India.

அடுத்த செய்தி