ஆப்நகரம்

கொரோனா: காளஹஸ்தி மக்களுக்கு வந்த நிலைமை திருப்பதி வாசிகளுக்கு வந்துவிடக் கூடாது - போலீசார் கவலை

கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருப்பதி நகர வீதிகளில் போலீஸார் வெள்ளிக்கிழமை அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.

Samayam Tamil 25 Apr 2020, 12:18 am
திருப்பதியில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் காளஹஸ்தியில் 41 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால் காளகஸ்தி நகரம் தற்போது முழு அளவில் ஆன லாக்டவுனில் உள்ளது.
Samayam Tamil awareness


இதனால் காளஹஸ்தியில் வசிக்கும் பொதுமக்கள் இன்னும் 21 நாட்கள் வீடுகளில் இருந்து வெளியில் வர இயலாது. எனவே காளகஸ்தியின் வசிக்கும் பொதுமக்களுக்கு வாலண்டியர்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அரசு விதித்த ஊரடங்கு உத்தரவை காளஹஸ்தியில் வசிக்கும் பொதுமக்கள் முழு அளவில் கடைப்பிடிக்காததே இந்த நிலைக்கு காரணமாக அமைந்துவிட்டது.

சுயவிளம்பரத்துக்காக பொதுமக்களின் உயிருடன் விளையாடும் ஆளும்கட்சி எம்எம்ஏக்கள்!!

இதுபோன்ற நிலை திருப்பதிக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக நகர பொது மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு வாகன அணிவகுப்பை போலீசார் வெள்ளிக்கிழமை நடத்தியது.

இதுகுறித்து, திருப்பதி எஸ்.பி.ரமேஷ் ரெட்டி கூறும்போது, "கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தவே போலீசார் இன்று திருப்பதியில் வாகன அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி