ஆப்நகரம்

இந்த வருஷம் முடியுற வரைக்கும் உள்ளூர் விமானங்கள் ஃப்ரீயா பறக்க முடியாது போல!!

உள்ளூர் விமான சேவைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நவம்பர் மாத இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

Samayam Tamil 24 Jul 2020, 9:08 pm
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை, ஐந்து கட்டங்களாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.
Samayam Tamil flight service


அப்போது சர்வதேச மற்றும் உள்ளூர் விமானப் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டன. அதன் பின் ஜூன் 1 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ளது.

அதாவது, தங்களது மாநிலங்களில் நிலவும் கொரோனா பாதிப்பிற்கேற்ப, அந்தந்த மாநிலங்களே பொதுமுடக்க கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிலித்திருந்தது.

நாளை முதல் பொது முடக்கம் நீக்கம்: முதல்வர் அதிரடி அறிவிப்பு

அதன்படி, தமிழகத்தில் சென்னையில் இருந்து திருச்சி, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு தேவைக்கேற்ப, அதேசமயம் உரிய கட்டுப்பாடுகளுடன் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்ரன. இதேபோன்றே பிற மாநிலங்களிலும் உள்ளூர் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன்கூடிய பொதுமுடக்கம் (அன்லாக் 2.0) ஜூலை 31 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதன் காரணமாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் உள்ளூர் விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என்று பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

கொரோனாவால் ஒழிந்த மாசு, போட்டோ ஆதாரம்...

ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, உள்ளூர் விமான சேவைக்கு தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் நவம்பர் மாதம் 24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, விமானப் போக்குவரத்து அமைச்சகம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்னை, டெல்லி, மும்பை, அகமதாபாத், புனே, நாக்பூர் ஆகிய மாநகரங்களில் இருந்து கொல்கத்தாவுக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவைகளுக்கு, மேற்கு வங்க மாநில அரசு ஜூலை 31 ஆம் தேதி வரை தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி