ஆப்நகரம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகள்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் சிறப்பான தீர்ப்புகளை இங்கே காணலாம்.

Samayam Tamil 1 Oct 2018, 5:45 pm
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஜே.எஸ்.கெஹர் ஏராளமான சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளார். இவரைத் தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியதில் தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முதன்மை வகிக்கிறார். இவர் வரும் அக்டோபர் 2018 உடன் ஓய்வு பெறுகிறார். ஒடிசா உயர்நீதிமன்றத்தில் தனது பணியைத் தொடங்கினார். ஜனவரி 17, 1996ல் ஒடிசா உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
Samayam Tamil Deepak Misra


மார்ச் 3, 1997ல் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். டிசம்பர் 19, 1997ல் நிரந்தர நீதிபதியாக உயர்வு பெற்றார். டிசம்பர் 23, 2009ல் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மே 24, 2010ல் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டார்.

அக்டோபர் 10, 2011ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சட்டத்தில் இருக்கும் நுணுக்கங்களை திறம்பட கற்று, தொலைநோக்கு பார்வையுடன் சிந்திக்கும் நீதிபதிகளில் ஒருவராக மிஸ்ரா மாறினார்.

இவரது சிறப்புமிக்க தீர்ப்புகள்,

* டிசம்பர் 2012ல் நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், 4 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.

* 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேனன் தூக்குத் தண்டனை வழக்கு விசாரணையை நள்ளிரவில் நடத்தினார். அதில் தூக்கு தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டார்.

* காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கையை 24 மணி நேரத்தில் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

* கடந்த ஆண்டு நவம்பர் 30ல் திரையரங்குகளில் தேசிய கீதம் பாட வேண்டும் என்று கட்டாயமாக்கி உத்தரவிடப்பட்ட அமர்வில் தீபக் மிஸ்ராவும் ஒருவர்.

* மே 13, 2016ல் குற்றவியல் அவதூறு நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கு உட்பட்டவை என்று உத்தரவிடப்பட்ட அமர்வில் தீபக் மிஸ்ராவும் ஒருவர்.

* ஏப்ரல் 27, 2012ல் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கியதற்கு தடை விதிக்கப்பட்ட உத்தரவை உறுதி செய்த அமர்வில் தீபக் மிஸ்ராவும் ஒருவர். முன்னதாக உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி அரசு, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கியதற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

* சிறுவர்களின் ஆபாச இணையதளங்களை தடை செய்து உத்தரவிட்டார்.

* சபரிமலை ஆலையத்தை பெண்களுக்கும் திறந்துவிட வேண்டும்.

* 1984ஆம் ஆண்டு சிக்கிம் கலவர வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்.

* சினி காஸ்டியூம் மற்றும் மேக்-அப் ஆர்டிஸ்ட்ஸ் அசோசியேசனில் பெண் மேக்-அப் ஆர்டிஸ்ட்ஸ் மற்றும் ஹேர் டிரஸ்ஸர்ஸ் உறுப்பினர் ஆவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கினார்.

* உத்தரகாண்டில் ஹரிஷ் ராவத் தலைமையிலான ஆட்சி பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த வழக்கில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, மீண்டும் ஹரிஷ் ராவத் முதலமைச்சராக பதவியேற்க அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது.

* செப்டம்பர் 23, 2016ல் புதிய பிரைவசி பாலிஸியை அறிமுகம் செய்ய வாட்ஸ்-அப் நிறுவனத்திற்கு அனுமதி. அதேசமயம் வாட்ஸ்-அப் மூலம் பெறப்பட்ட பயனாளிகளின் தகவல்களை பேஸ்புக் உள்ளிட்டவற்றுடன் பகிர தடை விதித்து உத்தரவிட்டார்.

* காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில், “காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை செயல்படுத்த ஸ்கீம் ஒன்றை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டார். இதன் மறுவிசாரணையில் ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியத்தைக் குறிக்கவில்லை. காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு தரும் மற்ற அம்சங்களையும் உள்ளடக்கியது என்று விளக்கம் அளித்தார்.

* பலாத்காரம் செய்தவர் மற்றும் பாதிக்கப்பட்டவர் இடையே சமாதானம் ஏற்பட்டாலும், அவர்களின் திருமணத்திற்கு அனுமதி அளிக்க முடியாது.

* ஓரினச் சேர்க்கை குற்றம் அல்ல என்றும், ஓரினச் சேர்க்கைக்கு எதிரான சட்டப்பிரிவு 377 ஐ ரத்து செய்வதாகவும் தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 7 ஆண்டுகளாக உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கிய தீபக் மிஸ்ரா, அக்டோபர் 1ல் ஓய்வு பெறுகிறார்.

CJI Dipak Misra has several landmark judgments to his credit.

அடுத்த செய்தி