ஆப்நகரம்

அவசர வழக்கு விசாரணை தற்போதைக்கு இல்லை; உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி அதிரடி!

புதுடெல்லி: சில வழிமுறைகள் வகுக்கப்படும் வரை, அவசர வழக்கு விசாரணை கிடையாது என்று புதிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 3 Oct 2018, 10:31 pm
நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றமாக உச்சநீதிமன்றம் கருதப்படுகிறது. இதன் 46வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
Samayam Tamil CJI


இந்நிலையில் புதிய தலைமை நீதிபதியிடம் ரஞ்சன் கோகாயிடம், அவசர வழக்குகள் சிலவற்றை விசாரிக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதிலளித்த அவர், இப்போது எதுவும் முறையிட வேண்டாம்.

குறிப்பிட்ட வழிமுறைகளையும், தகுதிகளையும் வகுக்க வேண்டியுள்ளது. அதன்பிறகே எந்த வகையில், எவ்வாறு முறையிடலாம் என்று முடிவு எடுக்கலாம். யாராவது ஒருவரை நாளையே தூக்கில் போடப் போகிறார்களா?

இல்லை நாளையே யாரையாவது வெளியேற்ற வேண்டுமா? அவ்வாறு இருந்தால் மட்டுமே அவசர வழக்கு விசாரணை நடத்தப்படும். எனவே அவசர வழக்குகளின் தன்மை குறித்து புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

CJI Ranjan Gogoi says no mentioning, urgent matters in Supreme Court till parameters are worked out.

அடுத்த செய்தி