ஆப்நகரம்

நாசமா போகும் 5வது நாடு இந்தியா!

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிப்படையும் நாடுகளில் இந்தியா 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Samayam Tamil 6 Dec 2019, 6:03 pm
கால நிலை மாற்றத்தால் பாதிப்படையும் நாடுகளில் 14வது இடத்திலிருந்து இந்தியா 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
Samayam Tamil 201906061833541980_India-is-responsible-for-climate-change-Trump_SECVPF


பருவ நிலை மாற்றம் என்பது உலகளவில் மிகப்பெரிய சவாலாக உள்ளது. மக்கள் சுவாசிக்கும் காற்று சுத்தமாக இல்லை. இதனால் இப்போது கார்ப்ரேட் நிறுவனங்கள் சுத்தமான காற்றை விற்கத் தொடங்கிவிட்டது.

'பசிக்கிது அம்மா'... மகளின் குரலை கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்...

நிலத்தடி நீரை நம்பி வாழ்ந்து வந்த நாம் இப்போது, மாநகராட்சி குடிநீர், ஆர். ஓ. குடிநீர் உள்ளிட்டவற்றை காசு கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு சென்றுவிட்டோம்.

இந்த சூழலை அதாவது நாம் எதிர்கொள்ளும் பருவ நிலை மாற்றங்களை பிற நாடுகளும் உணர்த்தத் தொடங்கிவிட்டன. ஆம், ஜெர்மனி நாட்டின் ஜெர்மன் வாட்ச் என்ற சுற்று சூழல் நிறுவனம் ஆண்டுதோறும் உலகளவில் நிகழும் பருவநில மாற்றம் தொடர்பாக அய்வு நடத்தி அதன் மூலம் நாடுகளை வரிசைப்படுத்துகிறது.

அந்த வரிசையில் 2017ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் இந்தியா 14ஆம் இடத்தை பிடித்திருந்தது. இந்நிலையில் இப்போது 2018ஆம் ஆண்டு தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2018ஆம் ஆண்டு இந்தியாவில் நிகழ்ந்த இயற்கை பேரிடர்களை கணக்கில் கொண்டு, தரவரிசைப் பட்டியலில் நமக்கு 5ஆம் இடம் வழங்கப்பட்டுள்ளது.

கத்தாரில் தாலிபன்களுடன் அமெரிக்கத் தூதர் பேச்சுவார்த்தை

பல்வேறு நாடுகள் இதுபோன்ற தரவுகளை ஆராய்ந்து தரவரிசைப் பட்டியலில் தங்கள் இடத்தை பின்னுக்கு கொண்டு சென்றுவிட்டன. ஆனால், நமது நாடு இந்த வரிசையில் 9 இடங்கள் முன்னேறி உள்ளது. கடந்த ஆண்டுகேரளாவில் ஏற்பட்ட வெள்ளம், நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு உள்ளிட்டவைகளை வைத்து இந்த பருவ நிலை மாற்றத்தால் ஏற்பட்ட விளைவுகள் கணக்கிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி