ஆப்நகரம்

இலங்கையைச் சேர்ந்த நான்கு மீன்பிடி படகுகள் ஆந்திராவில் பறிமுதல்

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்துக்காக இலங்கையைச் சேர்ந்த 4 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Samayam Tamil 16 Jul 2020, 12:26 pm
காக்கிநாடா துறைமுகத்திலிருந்து 180/நாட்டிக்கல் மைல் தொலைவில் வங்காள விரிகுடாவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த 4 மீன்பிடி படகுகளை கடலோர காவல்படையினர் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
Samayam Tamil கோப்புப்படம்


அவற்றில் ஒரு படகில் இருந்த சுமார் 40 கிலோ டூனா வகை மீன்களையும், அதில் இருந்த இலங்கையை சேர்ந்த 6 மீனவர்களையும் மெரைன் போலீஸாரிடம் கடலோர காவல் படையினர் ஒப்படைத்தனர். மேலும் அவர்களை கைது செய்த மெரைன் போலீசார், கைப்பற்றப்பட்ட மீன்களை ஏலம் விட்டனர்.

மீனவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் விலை அதிகமுள்ள டூனா வகை மீன்களை பிடிப்பதற்காக எல்லை தாண்டி மீன் வந்து மீன்பிடித்ததாக அவர்கள் கூறினர்.

நீங்க ஏர்டெல் பயனரா? உஷார்.. ஏனென்றால் 12 லட்சம் பேர் "தெறித்து" ஓடி விட்டனர்!

மற்ற மூன்று படகுகளில் இருந்த இலங்கையை சேர்ந்த மீனவர்கள் 20 பேரிடம் விசாரணை நடத்தி வரும் கடலோர காவல்படையினர் அவர்களை விரைவில் போலீசாரிடம் ஒப்படைப்பார்கள் என்று தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி