ஆப்நகரம்

இஸ்லாமியர்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது; மோடி

பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, இஸ்லாமியர்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

TNN 9 Dec 2017, 6:13 pm
பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, இஸ்லாமியர்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
Samayam Tamil cong making false patidar quota promise in gujarat like it did to muslims modi
இஸ்லாமியர்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது; மோடி


பிரதமர் மோடி குஜராத்தின் லூனாவாடவின் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இடஒதுக்கீடு வழங்குவதாக பொய்யான வாக்குறுதிகளை கூறி காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர்களை தவறாக வழிநடத்துவதாக தெரிவித்தார்.ஸ்ரீ

மேலும், அப்படி கூறிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி எந்த மாநிலத்திலும் நிறைவேற்றவில்லை என்றும், ஆனால், ஒவ்வொரு பகுதிகளிலும், இடஒதுக்கீடு வழங்குவதாக பொய் பிரச்சாரம் செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், எனது பெற்றோர் யார் என்று கேட்கும் காங்கிரசுக்கு பதில் ஒன்றை கூறிக் கொள்வதாகவும், தான் நாட்டுக்காகவும் 125 கோடி நாட்டு மக்களுக்காவும் தான் அர்ப்பணிக்கப்பட்டவன் என்றும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி