ஆப்நகரம்

வயநாட்டில் வாக்குறுதியை நிறைவேற்றிய ராகுல் காந்தி

வயநாடு தொகுதியில் மாணவிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார் ராகுல் காந்தி.

Samayam Tamil 21 Oct 2020, 6:50 am
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி மூன்று நாள் சுற்றுப்பயணமாக நேற்று (அக்டோபர் 20) தனது வயநாடு தொகுதிக்குச் சென்றார்.
Samayam Tamil rahul gandhi


சிறப்பு விமானம் மூலம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பின், மலப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர கொரோனா மறுஆய்வுக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அதன்பிறகு கடந்த ஆண்டு கேரளாவில் பெய்த பலத்த மழையினால் காவலப்பாரா மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட சகோதரிகளான காவ்யா, கார்த்திகா ஆகியோரை ராகுல் காந்தி சந்தித்தார்.

கடந்த ஆண்டு 59 பேரை பலிகொண்ட காவலப்பாரா நிலச்சரிவில் காவ்யா, கார்திகா ஆகியோர் தங்களது குடும்பம், உறவினர்கள், வீடு ஆகியவற்றை இழந்து தவித்தனர். காவ்யாவும் கார்த்திகாவும் விடுதியில் தங்கி படித்து வந்ததால், அவர்கள் இருவரும் இந்த விபத்திலிருந்து உயிர் தப்பினர்.

நவம்பர் 2 முதல் ஆட் - ஈவன் முறையில் பள்ளிகள் திறப்பு!

இந்த விபத்து நடந்தசமயம், பாதிக்கப்பட்ட சகோதரிகளைச் சந்தித்த ராகுல் காந்தி, விரைவில் வீடு கட்டித்தருவதாக வாக்குறுதி அளித்தார். அதன்படி, புதிதாகக் கட்டிமுடிக்கப்பட்ட வீட்டின் சாவியை ராகுல் காந்தி நேற்று அவர்களிடம் அளித்தார்.

வயநாடு தொகுதியில் கொரோனா பரவல் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் ராகுல் காந்தி இந்த பயணத்தை மேற்கொண்டதாக வயநாடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தயவு செய்து நாட்டு மக்களுக்கு இத சொல்லிடுங்க: பிரதமரை கலாய்த்த ராகுல்!

ராகுல்காந்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில் இதை குறிப்பிட்டுள்ளார். மேலும் கொரோனா வேகமாக பரவிவரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் மாறிமாறி பழி சொல்லிக்கொண்டிருக்கின்றன. இதை நிறுத்திவிட்டு கொரோனாவை தடுக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி