ஆப்நகரம்

Congress: நாடாளுமன்ற பொறுப்புகள் யார், யாருக்கு? லிஸ்ட் வெளியிட்டு சோனியா காந்தி அதிரடி!

புதிய தலைவர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தனது அதிரடியான நடவடிக்கையை தொடங்கியுள்ளார்.

Samayam Tamil 28 Aug 2020, 5:52 am
அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைவர் என்ற சலசலப்பு இன்னும் ஓயவில்லை. இதுதொடர்பாக 23 காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கட்சிக்கு தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்த விவகாரம் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் வெடித்தது. ராகுல் காந்தி சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைக்க மூத்த தலைவர்கள் கொந்தளித்தனர். அடுத்த ஆறு மாதத்திற்குள் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், அதுவரை சோனியா காந்தியே தலைவராக நீடிப்பார் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
Samayam Tamil Sonia Gandhi


வரும் செப்டம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தங்கள் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் சோனியா காந்தி ஈடுபட்டுள்ளார். அதன்படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சுமூகமான செயல்பாடு மற்றும் சிறப்பான ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

JEE NEET தேர்வு சர்ச்சை - பிரதமருக்கு அவசரமாக ஃபோன் போட்ட முதலமைச்சர்!

* மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் - குலாம் நபி ஆசாத்

* மாநிலங்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் - ஆனந்த் ஷர்மா

* மாநிலங்களவை காங்கிரஸ் கொறடா - ஜெய்ராம் ரமேஷ்

* மாநிலங்களவை காங்கிரஸ் குழு - குலாம் நபி ஆசாத், ஆனந்த் ஷர்மா, அகமது படேல், கே.சி வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ்

* மக்களவை காங்கிரஸ் தலைவர் - அதிர் ரஞ்சன் சவுத்ரி

* மக்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் - கவுரவ் கோகாய்

* மக்களவை காங்கிரஸ் தலைமைக் கொறடா - கே.சுரேஷ்

* மக்களவை காங்கிரஸ் கொறடா - ரவ்நீத் சிங் பிட்டு, மாணிக்கம் தாகூர்

* மக்களவை காங்கிரஸ் குழு - அதிர் ரஞ்சன் சவுத்ரி, கோகாய், சுரேஷ், ரவ்நீத் சிங் பிட்டு, மாணிக்கம் தாகூர்

உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு: உச்ச நீதிமன்றம்

மக்களவையை பொறுத்தவரை மூத்த தலைவர் மணிஷ் திவாரி ஓரங்கப்பட்டுள்ளதாக கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இவர் கோகாயை விட கட்சியில் மூத்தவர். ஆனால் அவருக்கு இடமளிக்கவில்லை என்று குமுறுகின்றனர். இதேபோல் சசி தரூருக்கும் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். மேலும் மாநிலங்களவை குழுவில் கபில் சிபலின் பெயரும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று அக்கட்சியினர் கூறுகின்றனர். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் ஒரு பூகம்பம் வெடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி