ஆப்நகரம்

நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா, ராகுல் போராட்டம்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட கட்சியின் மூத்தத் தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திடீரென போராட்டம்.

Samayam Tamil 11 Jul 2019, 11:53 am
கர்நாடாக, கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தும், பாஜகாவுக்கு தாவியும் வரும் நிலையில், ராகுல், சோனியா காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்.
Samayam Tamil Rahul Protest


கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் 14 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர். மேலும் நேற்று மாலை கூடுதலாக 2 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்துள்ளனர்.

இதே போன்று கோவா மாநிலத்தில், 10 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரே நாளில் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர். இவர்கள் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

காங்கிஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இதுபோன்று நடந்துகொள்வதற்கு பாஜக தான் காரணம் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்பட கட்சியின் மூத்த உறுப்பினர்கள், எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


கர்நாடகா, கோவாவில் பாஜவின் செயல்பாடுகளை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதம் மீது இன்று மாலைக்குள் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி